எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: சமூகவலைத்தள சேனலில் கோவை மாணவர்கள் குறித்து அவதூறு செய்தி; உளவுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தை, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் கொண்டாடியதாகக் கேரளாவில் உள்ள ஒரு சமூகவலைத்தள சேனலில் ஒளிபரப்பானது. இது மேலும் சில சமூகவலைத்தள குரூப்புகளிலும் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை உளவுத்துறை போலீசார், அந்த கல்லூரியில் விசாரணை நடத்தியது. அப்போது சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தினத்தன்று, முப்படை தளபதி மரணம் அடைந்ததையொட்டி அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
எப்போதோ நடை பெற்ற மாணவர்கள் ஆண்டுவிழா கொண்டாட்டத்தைச் சித்தரித்து, முப்படை தளபதியின் மரணத்துடன் ஒப்பிட்டு தவறாக ஒளிபரப்பியதும் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய தகவலைக் கேரள போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவித்து இருப்பதுடன், சம்பந்தப்பட்ட சமூகவலைத்தள சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பவும் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.