கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் வருடாந்திர ஆய்வு நடத்தினார்.

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஆண்டுதோறும் மாவட்ட எஸ்.பி.தலைமையில் வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் வருடாந்திர ஆய்வு நடத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி.செல்வ நாகரத்தினம் வருடாந்திர ஆய்வு நடத்தினார்.

கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வ நாகரத்தினத்தைப் பேரூர் டி.எஸ்.பி.திருமால் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வரவேற்றனர்.

முன்னதாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்த ஆய்வை தொடங்கினார். காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களின் உடை பொருட்கள், அரசு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் காவலர் குடியிருப்பு வழக்கில் பிடிபட்ட வாகனங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, காவலர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் வாகன விபத்துக்களைத் தடுக்க வேண்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாகப் புகார் வந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் போன்ற அறிவுரைகளை மாவட்ட எஸ்.பி.செல்வநாகரத்தினம் காவலரிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...