கோவை கிணத்துக்கடவு அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயம்..!

இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூரில் சரக்கு ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு தனது காரில் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், மதியம் கிணத்துக்கடவு அருகே கல்லாங்காட்டுபுதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென வலது புறமாக திரும்பியது. இதனால் பின்னால் வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தால் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும், 4 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...