புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு செட் உரிமையாளர் சுதாகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம், ராணி ராஜலட்சுமி நகரில், சுதாகர் (40) என்பவருக்கு சொந்தமான பாக்கு செட் உள்ளது.
இங்கு, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார், 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி, பாக்கு உரிக்கும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றுள்ளது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின்படி, குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார், சைல்டு லைன் அமைப்பினர் பாக்கு செட்டில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, 13 வயதிற்குட்பட்ட, 7 குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார், போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் போலீசார், பாக்கு செட் உரிமையாளர் சுதாகர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், பணியில் அமர்த்தப்பட்ட, 7 குழந்தை தொழிலாளர்களையும், சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.