கோவையில் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த திட்டம்..!

தினசரி 5 முதல் 10 போ் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இது தவிர 2 குழந்தைகள் உள்பட 3 போ் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் அனைத்து வட்டாரங்களிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநர் க. கிருஷ்ணகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

கோவையில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதில் இருந்து டெங்குப் பரவலும் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த ஊரகம், நகரப் பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வாா்டுகள், கிராமங்கள் வாரியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவையில், தினசரி 5 முதல் 10 போ் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, 2 குழந்தைகள் உள்பட 3 போ் டெங்கு பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கோவையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பூச்சியியல் நோய்த் தடுப்பு இணை இயக்குநர் க. கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி மற்றும் சூலூரில் ஆய்வு மேற்கொண்ட இணை இயக்குநா் தற்போது உள்ளதைக் காட்டிலும் டெங்கு பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி. அருணா, வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்பட பலர் உடனிருந்தனா்.

இது தொடர்பாக இணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் கூறியதாவது:-

கோவையில் டெங்கு தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தினசரி 100 பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுப்புழு ஒழிக்கும் பணியில் சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...