கோவையில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற வாலிபர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவு..!

புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் 406, 420 ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற வாலிபர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் (40). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பாண்டிச்சேரியை சேர்ந்த முத்து என்கிற முத்துப்பாண்டி என்பவர் வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக மனோஜ்குமார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அலுவலக வேலை மற்றும் வங்கிக்கு சென்று வருவது உள்ளிட்ட வேலைகளை அவர் நம்பிக்கையாக செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மனோஜ் குமார் நேற்று 5 லட்ச ரூபாய்க்கான செக்கை முத்துவிடம் கொடுத்து பணம் எடுத்து வரும்படி அனுப்பி வைத்தார். வெள்ளலூர் பகுதியில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவின் கிளைக்குச் சென்று செக்கை கொடுத்து முத்து பணத்தை எடுத்தார்.

ஆனால், ஐந்து லட்ச ரூபாய் பணத்தை உரிமையாளர் மனோஜ்குமார் இடம் கொடுக்காமல் தப்பிச்சென்றார். பணம் எடுக்கச் சென்ற முத்து வெகு நேரம் ஆகியும் வராததால் அவரது செல்போன் எண்ணுக்கு மனோஜ்குமார் தொடர்பு கொண்டார்.

ஆனால், முத்துவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, முத்துவை பல இடங்களில் சென்று தேடி பார்த்தார். ஆனால், முத்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.

இதையடுத்து, மனோஜ்குமார் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் sec 406, 420 IPC பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...