பொள்ளாச்சியில் முன்னாள் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது..!

பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சியில் முன்னாள் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி அறிவுறுத்தலின்படி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தியூர் சோதனை சாவடியில் உதவி ஆய்வாளர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது பழனிலிருந்து பொள்ளாச்சி வரும் அரசு பேருந்தில் சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா கடத்திய செடி முத்தூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூர்த்தி ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும், தாலுகா காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பான் மசாலா, குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஹரிராமகிருஷ்ணன் என்பவரிடம் 10 கிலோ பான் மசாலா மற்றும் குட்கா பறிமுதல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...