கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலி..!

கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மதிரெட்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி குழந்தைவேல். இவருடைய மனைவி அமுதா (30). இவர்களின் மகன் அஸ்வின் (6), மகள் காவியா (4). குழந்தைவேல் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில், அஸ்வினுக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அஸ்வினுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.



இதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர், அவர் நேற்று முன்தினம் காலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், அனுமதிக்கப்பட்ட 5 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி அஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...