கோவையில் காட்டு யானை தாக்கி ஆடு மேய்க்கும் முதியவர் பரிதாபமாக பலி..!

துடியலூர் ஆனைக்கட்டி தூவைப்பதி அருகே ஆடு மேய்க்கும் முதியவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: கோவையில் காட்டு யானை தாக்கி ஆடு மேய்க்கும் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவையை அடுத்த துடியலூர் ஆனைக்கட்டி தூவைப்பதி அருகே உள்ள ஆர்நாட்காடு பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவருடைய மகன் காரை (70) ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், துணி துவைத்து குளிப்பதற்காக பால் கம்பெனி அருகே முள்ளுக்காடு நீரோடைக்கு சென்றார்.

அப்போது, அவருக்கு எதிரே திடீரென்று காட்டுயானை ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காரை அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை காட்டு யானை துரத்திச் சென்று துதிக்கையால் பிடித்துத் தூக்கி வீசியது.

இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த காரையை யானை காலால் மிதித்தது. யானை தாக்கியதில் காரை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே அந்த பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சரஸ்வதி ஆடு மேய்க்க சென்றார். அப்போது, யானை தாக்கி காரை இறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த தகவலின் பேரில், கோவை வனச்சரகர் அருண் சிங், தடாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...