கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது..!

மேலும், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து, பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்ற வாலிபர் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கிணத்துகடவு போலீசார் நேற்று நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வேகமாக கேரளாவை நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த இருசக்கர வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு போலீசார் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் கேரளா மாநிலம் மவப்புரம் பகுதியை சேர்ந்த நெளசத்(22) என்பதும், இவர் திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் உள்ள ஒரு டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.

நெளசத் திருப்பூர் பகுதியில் கஞ்சா வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றது விசாரணையில் தெரியவந்தது.



பின்னர், கைது செய்யப்பட்ட நெளசத்திடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து நெளசத்தை பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...