முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து டெல்லி கிளம்பியது...!

சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்ட ராணுவ வீரர்களின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது.



கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் எம்.ஐ. 17வி ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின் தமிழக அரசின் அமரர் ஊர்தியில் தனித்தனியாக உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சூலூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டது. வரும் வழியில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்ட அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே திடீரென விபத்துக்குள்ளாகியது.

பின்னர் மற்றொரு வாகனத்தில் உடல் மாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியது.



இதையடுத்து, போக்குவரத்து சரி செய்தபின் ராணுவ வீரர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்திற்கு 2.55 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.



சாலை வழியாக கொண்டுவரப்பட்ட உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இதனை தொடர்ந்து, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை விமான தளத்திலிருந்து சி 130 சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...