மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச் சாவடிகளும், 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டார்.
கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2021 புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 2018 ஆம் ஆண்டு வார்டு மறு வரையறை செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அரசியல் அடிப்படையிலும், 01-11- 2021 நாள் அன்று வெளியிடப்பட்ட 117 கவுண்டம்பாளையம், 118 கோயம்புத்தூர் வடக்கு, 119 தொண்டாமுத்தூர், 120 கோயம்புத்தூர் தெற்கு, 121 சிங்காநல்லூர், 122 கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபாலன் சுன்கரா வெளியிட்டார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 1290 வாக்குச் சாவடிகளும், 287 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆண் வாக்காளர்கள் 7,69,397, பெண் வாக்காளர்கள் 7,68,736 மற்றும் மூன்றாம் பாலினம் 278 மொத்தம் 15,38,411 வாக்காளர்கள் உள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபாலன் சுன்கரா தெரிவித்தார்.