கிணத்துக்கடவில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் 3-பேர் கைது

கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூரில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 3-பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வீரப்பகவுண்டனூரில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள் 3-பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை அடைக்கப்பட்டது.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிறுத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்து மூன்று வாலிபர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் இ வீரப்பகவுண்டனூரில் கடைகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (23),பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(எ)ராசுக்குட்டி(21) கிருஷ்ணசாமிபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(28) ஆகிய மூன்று பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...