கோவையில் வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்..!

3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் முனைவர் ராமநாதன் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை 2 மாதங்களிலேயே சுமார் 89 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இது தவிர இன்னும் டிசம்பர் மாதத்தில் மழை பெய்ய வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஒரு நாளில் பெய்யும் மழையின் அளவு அதிகமாகி உள்ளது. ஆனால், மழை பெய்யும் நாட்களின் எண்ணிக்கை குறைகிறது.

ஒரு நாளில் பெய்ய வேண்டிய மழை அளவு அதிகமாவதால் மண் அரிமானம் ஏற்படும். இதனால் மழைநீரை சேமிக்கும் திறனை மண் இழந்து விடுகிறது.

மழை பெய்யும் நாளும், மழையின் அளவும் அதிகமாக இருந்தால்தான் நல்லது. ஆனால் இப்போது மழை பெய்யும் நாள் குறைந்து மழைப்பொழிவு அதிகமாக இருப்பது எதை காட்டுகிறது என்றால் காலநிலை மாறுபாட்டின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் மற்றொரு அறிகுறி என்னவென்றால் பருவம் தவறி மழை பெய்வது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்து விடும்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதம் 24ம் தேதிதான் நின்றது. அதாவது தென்மேற்கு பருவமழை அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது. இது பருவம் தவறி மழை பொழிவதை காட்டுகிறது.

இதேபோல், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் முடிய வேண்டும். ஆனால், டிசம்பரில் முடியாமல் ஜனவரி 19ம் தேதி வரை மழை நீடித்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதன் காலத்தை தாண்டி வடகிழக்கு பருவமழை காலத்தையும் எடுத்துக்கொண்டுள்ளதும் காலநிலை மாற்றத்தின் அறிகுறிகளாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...