அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை உட்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவ மழைக்கான காற்று வீசுவதால் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்.
அதேபோல, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
மற்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
மேலும், அதிகபட்சம் 31; குறைந்த பட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில், 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. பெரியாறு, 8; தென்காசி, விராலிமலை, செங்கோட்டை 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.