பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் 15-ந் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்..!

காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து விவசாயிகள் பயன்பெறலாம்.


கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 15-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய, மாதந்தோறும் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம், சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.

அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரம், வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது பிரச்சினைகளை முறையிடுவர்.

இதில் உடனடியாக தீர்வு காணப்படுவதால், விவசாயிகளுக்கு பயனளிப்பதாக அமைந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அந்தந்த ஒன்றிய வேளாண் துறை அலுவலகத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது, கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வரும் 15-ம் தேதி பொள்ளாச்சியில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், சார் ஆட்சியர் தலைமையில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து விவசாயிகள் பயன்பெறலாம்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...