கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த ஆண்டைவிட அதற்கு முந்தைய ஆண்டான கடந்த 2019-நவம்பர் மாதத்தில் 11,500-பாஸ்போர்ட்கள் விநியோகம். அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 200 பாஸ்போர்ட் வரை அதிகம் வழங்கப்பட்டுள்ளன.
கோவை: கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் -11,712 பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டன.
கோவை உள்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். கோவையில், உப்பிலிபாளையம் பகுதியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அலுவலகம் மற்றும் அவிநாசி ரோடு சித்ரா அருகே பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு தினங்களில் பயனாளிகளுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த மாதம் 11,712 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. எனவே கடந்த ஆண்டைவிட அதற்கு முந்தைய ஆண்டான கடந்த 2019 நவம்பர் மாதத்தில் 11,500 பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 200 பாஸ்போர்ட் வரை அதிகம் வழங்கப்பட்டுள்ளன.
சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் விரைவில் பாஸ்போர்ட் வழங்க கோவையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு, பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.