பொள்ளாச்சி அருகே காணாமல் போன மூதாட்டி ஆற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன மூதாட்டியின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது. உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே காணாமல் போன மூதாட்டியின் உடல் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள வளந்தாயமரம் பகுதியைச் சேர்ந்தவர் பீபிஜான்(60), இவர் பல ஆண்டுகளாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நேற்று முன்தினம் அம்பராம்பாளையம் தர்காவுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இரவு வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் ஆனைமலை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், ஆத்து பொள்ளாச்சி வழியாகச் செல்லும் ஆழியாறு ஆற்றங்கரையில், பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் உடலை, கைப்பற்றி விசாரித்ததில், அது காணாமல் போன பீபிஜான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய ஆனைமலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பின் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...