பொள்ளாச்சியில் மார்க்கெட் ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மார்க்கெட் ரோடு அருகே அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனரை மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோபாலபுரம் செல்லும் அரசு பேருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் தர்மலிங்கம் இயக்கினார்.
அப்போது மார்க்கெட் சாலை திருவள்ளுவர் திடல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலை நடுவே சிலர் நடந்து சென்று கொண்டிருந்ததால் ஓட்டுநர் ஒலி எழுப்பி விலகி செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர் அபுதாஹீர் என்பவர் பேருந்தில் ஏறி ஓட்டுநர் தர்ம லிங்கத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இருவருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது.
தகாத வார்த்தையால் திட்டி பயணிகள் முன்னிலையிலேயே தர்ம லிங்கத்தை ஆட்டோ ஓட்டுநர் அபுதாஹிர் சரமாரியாகத் தாக்கினார்.
பின்னர் பயணிகள் மற்றும் நடத்துனர் காயமடைந்த ஓட்டுநரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தர்மலிங்கம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் அபுதாஹீரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.