ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து 1-ம் வகுப்பு மாணவன் பலி

ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 1-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: ஜீப் ரிவர்ஸில் சென்றபோது விபத்து ஏற்பட்டு 1-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக, போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை சூலூர் சுல்தான்பேட்டை செலக்கரசல் மதுரை வீரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம் 33, இவருக்கு சித்தார்த் என்ற குழந்தை உள்ளது.

சித்தார்த் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சித்தர் தனது நண்பர்களுடன் செலக்கரிசல் மதுரை வீரன் கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சில வாகனங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைத் தெரியாமல் அந்த பகுதியில் தங்கி டிரைவராக வேலை செய்து கொண்டிருந்த சண்முகம் என்பவர் அங்கிருந்த ஜீப்பை பின் நோக்கி வேகமாக எடுத்தார்.

ஜீப் வருவதைப் பார்த்து விளையாடிக்கொண்டிருந்த சிறு குழந்தைகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சித்தார்த் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் சித்தார்த்துக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுல்தான் பேட்டை போலீசார் அங்கு வந்து சித்தார்த்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...