கோவையில் நள்ளிரவில் தண்டவாளத்தில் தலைவைத்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

நேற்று இரவு வீட்டில் இருந்த மாணவர், தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு, போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் அருகே உள்ள இ.பி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் ஆண்டோ புகழ் ராயன் வயது 19, இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களாக ஆண்டோ புகழ் ராயன் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்ததால், தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் தனது தாயிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர், போத்தனூர் இடையே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். பின்னர், 12 மணி அளவில் அந்த வழியாக சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற ரயில் மாணவர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.

இதில், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக மாணவர் இறந்தார். இதுகுறித்து, ரயில் எஞ்சின் டிரைவர் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...