கோவையில் யார் உதவியும் இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால், குழந்தை இறப்பு..! தாய் மீது வழக்குபதிவு.

முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததால்,  பெரிய கடை வீதி போலீசார் தாய் மீது Sec 315 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



கோவை: கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 38). நகை பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி புண்ணியவதி (32). இவர்களுக்கு, ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமானதால், புண்ணியவதி மனவருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

நிறைமாத கர்ப்பிணியான அவர் வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். அவருக்குஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தொப்புள்கொடி சரியாக அறுபடாததால், குழந்தையும், தாயும் மயக்க நிலையில் இருந்துள்ளனர். 

அவரது வீட்டில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் மற்றும் சேயை பரிசோதித்த மருத்துவர்கள், முறையாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பெரியகடை வீதி காவல் நிலையஆய்வாளர் சாந்தி விசாரணை நடத்தி, புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315 (குழந்தை உயிருடன் பிறப்பதைத் தடுத்தல் மற்றும் பிறந்த பின் இறக்கச் செய்தல்) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்குத்தானே பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...