கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடசித்தூர் பகுதியில் வருகிற 9-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படாமல் இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாகக் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, அந்தந்த தாலுகா மற்றும் வருவாய் கோட்டங்களில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இதன் ஒருபகுதியாக வருகிற 9-ஆம் தேதி கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்குட்பட்ட வடசித்தூரில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற இருப்பதாக வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கலாம் என்றும், மேலும் அரசு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.