கோவையில்‌ மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு: மாநகராட்சியில்‌ முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்..!‌

கோவை மாநகராட்சியில்‌ முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கானீ ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்றது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கான்‌ ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தாவு காண்பதற்கான முதற்கட்ட ஆலோசனைக்கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ இன்று 06.12.2021 நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பேசியதாவது, “கோவை மாநகராட்சியில்‌ அவினாசி சாலை மேம்பாலம்‌, காளீஸ்வரா மில்‌ சாலை, லங்கா கார்னர்‌, கிக்கானி ரயில்வே பாலம்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில்‌ மழைநீர்‌ தேங்குவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ பொருட்டு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும்‌, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள்‌ துவங்குவதற்கு முன்பாகவே மழைநீர்‌

வடிகால்களைத் தூர்வாரிட வேண்டும்‌.

மேலும்‌, எவ்வகையான அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டுமென விரிவான திட்டமிடுதல்‌ வேண்டும்‌. இவ்விடங்களில்‌ சிறப்பு கவனம்‌ செலுத்தி கண்காணிப்பு கேமராக்கள்‌ பொருத்திக் கண்காணிக்க வண்டும்‌. அதிவேக மோட்டார்கள்‌ பொருத்தித் தேங்கும்‌ மழைநீரை வெளியேற்றுதல்‌, மழைநீரை வேறு இடங்களுக்குத் திருப்பி விடச் சாத்தியக்‌ கூறுகளைக் கண்டறிதல்‌ வேண்டும்‌.

மாநகராட்சிப்‌ பொறியாளர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ மற்றும்‌ மருத்துவர்கள்‌, தொழிலதிபர்கள்‌, தலைசிறந்த கல்லூரி பொறியாளர்கள்‌, தன்னார்வலர்கள்‌ ஆகியோர்களை ஒருங்கிணைத்து வல்லுநர்‌ குழு அமைத்து உரிய திட்டமிடுதல்‌ மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

ஒரு வாரத்தில்‌ மீண்டும்‌ இக்குழுவில்‌ யார்‌ யார்‌ இடம்‌ பெறுவது என்பது குறித்தும்‌, தொடர்‌ நடவடிக்கைகளில்‌ மேற்கொள்வது குறித்து மீண்டும்‌ கூடி ஆலோசிக்கப்படும்‌. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இக்குழுவிற்கு ஒரு மாத காலத்திற்குள்‌ வழங்க வேண்டும்‌” என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, சூயஸ்‌ திட்ட இயக்குநர்‌ அமிர்த்‌ நியோகி, மாநகராட்சி பொறியாளாகள்‌ ராமசாமி, பிரபாகா, ஓய்வு பெற்ற ஆர்கிடெக்ட்‌, தொழில்நுட்ப வல்லுநர்கள்‌, தன்னார்வலர்கள்‌, ஓய்வு பெற்ற பொறியியல்‌ கல்லூரி பேராசிரியா உள்ளிட்டோர்‌ இருந்தனர்‌.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...