கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இன்று 06.12.2021 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.10க்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, சிவானந்தா காலனி சந்திப்பு பகுதியில் பாதாளச் சாக்கடையில் தற்போது பெய்த கனமழையின் போது ஏற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்தும், அப்பகுதியில் பாதாளச் சாக்கடை சரிசெய்யப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர், தொடர்ந்து, வார்டு எண்.9க்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதையும், வார்டு எண்.5க்குட்பட்ட கல்பனா தியேட்டர் அருகிலுள்ள தனியார் அடுக்குமாடிக்குடியிருப்பு சாலையில் கழிவுநீர் வெளியாகியுள்ளதைச் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆணையாளர், பார்வையிட்டு தரமான முறையில் சரிசெய்ய வேண்டும் எனவும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மேற்கு மண்டலம் வார்டு எண்.8க்குட்பட்ட குமரன் நகரில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதையும், கே.ஆர்.கார்டன் பகுதியில் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பணியிலிருந்து 110 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் இது நாள்வரை 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறைதான் நல்ல தண்ண் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இணைப்பு வழங்கியதால் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநா கிடைக்கும் என ஆணையாளர் தெரிவித்தார். பின்னர், வித்யா காலனியில் பழுதாகியுள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையர் சிவசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா் சண்முகநாதன், உதவி செயற்பொறியாளர்கள் சக்திவேல், உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.