கோவையில் மேற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று 06.12.2021 நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10க்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலை, சிவானந்தா காலனி சந்திப்பு பகுதியில்‌ பாதாளச் சாக்கடையில்‌ தற்போது பெய்த கனமழையின்‌ போது ஏற்பட்ட அடைப்புகளைச் சரிசெய்தும்‌, அப்பகுதியில்‌ பாதாளச் சாக்கடை சரிசெய்யப்பட்டு வருவதை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர், தொடர்ந்து, வார்டு எண்‌.9க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ ஹவுசிங்‌ யூனிட்‌ பகுதியில்‌ பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுவருவதையும்‌, வார்டு எண்‌.5க்குட்பட்ட கல்பனா தியேட்டர்‌ அருகிலுள்ள தனியார்‌ அடுக்குமாடிக்குடியிருப்பு‌ சாலையில்‌ கழிவுநீர் வெளியாகியுள்ளதைச் சரிசெய்யும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை ஆணையாளர்‌‌, பார்வையிட்டு தரமான முறையில்‌ சரிசெய்ய வேண்டும்‌ எனவும்‌, அப்பகுதியில்‌ உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ எனவும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.8க்குட்பட்ட குமரன்‌ நகரில்‌ சாலைகளில்‌ மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில்‌ சரிசெய்யும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதையும்‌, கே.ஆர்‌.கார்டன்‌ பகுதியில்‌ கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி மற்றும்‌ வீரகேரளம்‌ கூட்டுக்‌ குடிநீர் திட்டத்தில்‌ பணியிலிருந்து 110 குடியிருப்புகளுக்கு குடிநீர்‌ விநியோகிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ ஆய்வு செய்தார்‌.



அப்பகுதியில்‌ இது நாள்வரை 10 முதல்‌ 12 நாட்களுக்கு ஒருமுறைதான்‌ நல்ல தண்ண்‌ விநியோகம்‌ செய்யப்பட்டது. தற்போது இணைப்பு வழங்கியதால்‌ 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநா கிடைக்கும்‌ என ஆணையாளர்‌ தெரிவித்தார்‌. பின்னர்‌, வித்யா காலனியில்‌ பழுதாகியுள்ள சாலைகளில்‌ மழைநீர்‌ தேங்கியிருப்பதை நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, உடனடியாக சரிசெய்யுமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ சிவசுப்பிரமணியம்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா்‌ சண்முகநாதன்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌ சக்திவேல்‌, உத்தமன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...