மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்திருந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் இணைந்த கரங்கள் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் என்றும், முறையான கல்வித் தகுதிகள் இருந்தும் நிலையான பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறினர்.
எனவே, அரசாங்கத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகளை ஒதுக்கித்தர வேண்டும் எனவும், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி தரவேண்டும் என்றும், பசுமை வீடு திட்டத்தின் கீழ் இலவச இடத்துடன் புதிய வீடு கட்டிக் கொடுத்து உதவ வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர்.