கோவையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 147 வழக்குகள் பதிவு..!

இதில் மாநகரில் 86 வழக்குகளும், மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக, மாநகரில் 86 வழக்குகளும், மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு குட்கா, பான் மசாலா ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. எனினும் அவற்றின் விற்பனை சட்டவிரோதமாக தொடர்ந்து நடக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், போலீசாரும் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை மாநகரில் மட்டும், 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 61 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து ஏராளமான பாக்கெட்டுகள் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, மது பாட்டில்களை சட்டவிரோதமாக வெளியில் விற்றதாகவும், 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் 501 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...