கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கியுள்ள பொதுமக்கள் கனமழையில் சாக்கடை நீரும், மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாக மனு அளித்தனர்.


கோவை: கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக் கோரி பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை ஆர்.எஸ். புரம் காமராஜர் சந்து பொதுமக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும், வணிக ரீதியாக உள்ள மின்சார கட்டணத்தை முறைப்படுத்த கோரியும் கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

கோவை காந்தி பார்க் அருகில் இருந்த காமராஜர் சந்து பொதுமக்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மாற்று இடம் ஏற்படுத்துதல் சம்பந்தமாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று நிர்வாகமும் தற்காலிகமாக ஆர்.எஸ் புரம் மைதானத்தில் குடிசைகள் அமைத்து தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர் போன்றவை கிடைக்காமல் தவித்து வருவதாகவும், கன மழையில் சாக்கடை நீரும் மழை நீரும் ஒன்றாகக் கலந்து வீட்டிற்குள் வருவதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக பட்டியல் அணி செயலாளர் கரிகாலன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...