மேட்டுப்பாளையத்தில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த நபர்: போலீசார் தீவிர விசாரணை.

கொலை செய்யப்பட்ட காதர் ஜெய்லாணி (32) மீது காவல்நிலையத்தில் 10க்கு மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை நெல்லித்துறை சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் வாலிபரை கொலை செய்து சாலையோரத்தில் போட்டு சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பவரது மகன் அப்துல் காதர் ஜெய்லாணி (வயது 32). இவர் மீது காவல்நிலையத்தில் 10க்கு மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நெல்லித்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இன்று காலை ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது.



இச்சம்பவம் குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றமேட்டுப்பாளையம் டி.எஸ். பி பாலமுருகன், காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வவிநாயகம் உள்ளிட்டோர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இவரை கொலை செய்தவர்கள் யார் ? எதற்காக கொலை செய்தார்கள் ? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...