கொலை செய்யப்பட்ட காதர் ஜெய்லாணி (32) மீது காவல்நிலையத்தில் 10க்கு மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை நெல்லித்துறை சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் வாலிபரை கொலை செய்து சாலையோரத்தில் போட்டு சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த அப்துல் அஜிஸ் என்பவரது மகன் அப்துல் காதர் ஜெய்லாணி (வயது 32). இவர் மீது காவல்நிலையத்தில் 10க்கு மேற்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நெல்லித்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இன்று காலை ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றமேட்டுப்பாளையம் டி.எஸ். பி பாலமுருகன், காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வவிநாயகம் உள்ளிட்டோர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இவரை கொலை செய்தவர்கள் யார் ? எதற்காக கொலை செய்தார்கள் ? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.