கோவை மத்தியச்சிறையில் மாநில மனித உரிமை ஆணையத்தலைவர் ஆய்வு..!

கோவை மத்தியச் சிறையில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார். சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மத்தியச் சிறையில் மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மத்தியச் சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குற்றங்களுக்குத் தகுந்தவாறு பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை மத்தியச் சிறையில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி பாஸ்கரன்ஆய்வு மேற்கொண்டார்.

சிறை வளாகம், சிறை மருத்துவமனை, தொழிற்கூடம், பெண்கள் சிறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அவா், கைதிகளிடம் மனித உரிமை மீறல்கள் ஏதாவது நடக்கின்றனவா, சிறைத் துறை அதிகாரிகள் துன்புறுத்தலில் ஈடுபட்டனரா என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, சிறைத்துறை அதிகாரிகளுடன் நீதிபதி ஆலோசனை நடத்தினார். கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், கோவை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா மற்றும் சிறைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...