வால்பாறையில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு..!

தொடர் கனமழை காரணமாக இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


கோவை: வால்பாறையில் பெய்த கனமழையால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மதியத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று அக்காமலை எஸ்டேட் புல் மலை வன பகுதி, கருமலை எஸ்டேட் வனப்பகுதியில் கனமழை பெய்தது.



இந்த கனமழையால் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சியில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இதனால் நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கலங்கிய நிலையில் வந்தது.



அப்போது, ஆற்றங்கரையோரம் மக்கள் யாருமில்லாததால் எவ்வித பாதிப்பும் இன்றி தண்ணீர் கடந்து சென்றது.

பின்னர், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழை குறைந்து இயல்பு நிலை திரும்பியது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...