கோவையில் கொட்டி தீர்த்த கனமழை..! சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் மூழ்கிய கார்..!!

உப்பிலிபாளையம் மரக்கடை பாலத்திற்கு கீழ் கார் ஒன்று நீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி உயிர் தப்பினார்.


கோவை: கோவையில் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு மேல் வானம் கருமேகம் சூழ்ந்து திரண்டு இருந்தது. அப்போது, கருமேகம் சூழ்ந்து இருந்ததால் பகலில் கூட இரவு போல் காட்சி அளித்தது.



இதைத்தொடர்ந்து, மதியம் சரியாக 1.30 மணியளவில் இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டித்தீர்த்தது.



இந்த கனமழை காரணமாக உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம், வடவள்ளி, காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், புலியகுளம், திருச்சி சாலை, சரவணம்பட்டி, கணபதி மாநகர், காந்திமாநகர், பீளமேடு, கீரணத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.



இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனர்.

மேலும், கனமழை காரணமாக கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.



அதேபோல, உப்பிலிபாளையம் மரக்கடை பாலத்திற்கு கீழ் கார் ஒன்று நீரில் மூழ்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி உயிர் தப்பினார். மேலும், லங்கா கார்னர் சுரங்கபாதையில், தனியார் பேருந்து ஒன்று மாட்டிக்கொண்டது, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.

மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி சாலைகள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...