ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கல்லார்குடி மலைவாழ் மக்களின் தற்காலிக குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்..!

பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கல்லார்குடி மலைவாழ் மக்களின் தற்காலிக குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது கல்லார்குடி மலை கிராமம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். கடந்த 2019ம் ஆண்டு பெய்த கன மழையால் மலைவாழ் மக்களின் 21 குடிசைகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

பின்னர், அங்கிருந்த மலைவாழ் மக்களை தாய்முடி பகுதியில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர் குடியிருப்பில் தற்காலிகமாக வனத்துறையினர் தங்க வைத்தனர். பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நில பட்டா கோரி பல போராட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக கடந்த நவம்பர் 7ம் தேதி குடிசைகளை இழந்த 21 குடும்பங்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் நிலத்தை ஒதுக்கி தமிழக அரசு அவர்களுக்கு பட்டா வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மலைவாழ் மக்கள் சிலர் குடிசைகளை அமைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், பட்டா வழங்கப்பட்ட இடத்தை விடுத்து அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குச் சொந்தமான இடத்தில் நீங்கள் குடிசைகள் அமைக்கக் கூடாது என்று கூறி அமைக்கப்பட்ட குடிசைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு திரண்ட அனைத்து அரசியல் சமூக இயக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் அமைத்த குடிசைகளை அத்துமீறி அகற்றிய வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...