கோவையில் தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: மிரட்டல் விடுத்த சகோதரர்கள் கைது..!

தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் மீது போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள் மீது போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 25-வயது இளம்பெண் ஒரு மாலில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

இவரை வாலிபர் ஒருவர் அடிக்கடி பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தார். நேற்று முன்தினம் இளம்பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். சுகுணாபுரம் பாலம் அருகே சென்றபோது பின்தொடர்ந்து வந்த அந்த வாலிபர் திடீரென இளம்பெண்ணின் தோளில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இளம்பெண் வாலிபரிடம் இருந்து தப்பி வீட்டுக்குச் சென்று நடந்த விவரங்களைச் சகோதரர் மற்றும் தந்தையிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த வாலிபரின் வீட்டுக்குச் சென்று இது குறித்து கேட்டனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி இளம்பெண்ணின் குடும்பத்தினரை, தாக்கியது குறித்து இளம் பெண் வீட்டார் குடும்பத்தில் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது கிழக்கு சுகுனாபுரம் பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முகம்மத் நவ்பிக் 30, மற்றும் அவரது தம்பி முகமது நவ்சாத் இளம்பெண் குடும்பத்தினரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகம்மது நவ்பிக், முகமது நவ்சாத் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...