'ஒமைக்ரான்' எதிரொலி: விமானத்தில் கோவை வந்த 17-பேர் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு..!

கோவை வந்த 17-பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17-பேரும் தனியைப் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.


கோவை: கோவை வந்த 17-பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17-பேரும் தனியைப் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் கொரோனோ தொற்று 2-வது அலை சற்று குறைந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

புதிதாக உருமாறிய இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்படப் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளதால் அந்த நாடுகள் அதிக ஆபத்து 'நாடுகள்' என்று பட்டியல் இடப்பட்டுள்ளன.

ஆனால் அந்த நாடுகளிலிருந்து கோவைக்குக் கடந்த ஒரு மாதத்தில் 17-பேர் வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் புதிய வைரஸ் கண்டறிவதற்கு முன்பே அதாவது கடந்த மாதம் 24-ம் தேதிக்கு முன்பே கோவை வந்தவர்கள். கோவை வந்த போது புதிய ஒமைக்ரான் வைரஸ் பற்றி உலகிற்குத் தெரியாது.

ஆனால் தற்போது அது தெரியவந்துள்ளதால் அந்த நாடுகளிலிருந்து கோவை வந்த 17 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17 பேரும் தனியைப் படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். என்றும், அவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஓமைக்கிரான் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி அங்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர். உடனடியாக தனிமைப் படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...