பொள்ளாச்சியில் ஹாட் ஏர் 'பலூன் திருவிழா' நடத்த திட்டம் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட் ஏர் பலூன் திருவிழாவைப் போன்று பொள்ளாச்சியிலும் ஹாட்டர் பலூன் திருவிழா கூடிய விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.



கோவை: பொள்ளாச்சியில் ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஹோட்டல்களில் ஆன்லைன் புக்கிங் வசதி மூலம் 22-லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், மெக்சிகோ நாட்டில் நடைபெறுவது போல் கோவை மாவட்ட பொள்ளாச்சியில் ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி குள பணிகளைத் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடமும் கேட்டறிந்தார்.



பின்னர், செய்தியாளர்களை கண்டித்த அவர், கோவை உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு வசதி செய்து தரப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும், இரண்டு குளங்களிலும் படகு வசதிக்கான சாத்திய கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் 75-சதவீதம் நிறைவுற்ற நிலையில் 25-சதவீதம் பணிகள் கொரோனா தொற்று பரவலால் நிலுவையில், உள்ளதெனக் கூறிய அவர் வைரஸ் தொற்று குறைந்ததும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாகச் சுற்றுலா தளங்களை மூடுவது தொடர்பாகத் தக்க நேரத்தில் முதலமைச்சர் ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடுவார் என அவர் அப்போது குறிப்பிட்டார். சுற்றுலா துறைக்கென முதலமைச்சரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் தனி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருவதாகவும், தமிழ்நாடு ஹோட்டல்களை புதுப்பிக்க பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறையில் வருவாயை இழந்திருப்பதாகத் தெரிவித்த அவர் தமிழ்நாடு ஹோட்டல்களில் சொமேட்டோ, சுவிக்கி, போன்று ஆன்லைன் இணையதளங்கள் மூலம் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு ஹோட்டல்களில் புக் செய்யும் வசதிகளால் 22 லட்சம் வருவாய் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மெக்சிகோ நாட்டில் நடந்த ஹாட் ஏர் பலூன் திருவிழாவைப் போன்று பொள்ளாச்சியிலும் ஹாட்டர் பலூன் திருவிழா கூடிய விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...