தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20-ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் இடது மதகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை 20-ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் இடது மதகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. உப்பாறு அணை இந்த அணை கடந்த 5-நாட்களுக்கு முன்பு அணையின் முழு கொள்ளளவான 24-அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து மெயின் செட்டர் வழியாக தண்ணீர் உப்பாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் விவசாயத்திற்குப் பயன்பெறும் வகையில் அணையின் இடது வலது புறங்களில் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் இடது புறம் உள்ள சப்டர் பழுது ஏற்பட்டதால் வாய்க்கால் நீர் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியவில்லை.
இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துப் பழுதடைந்த ஷட்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷட்டர் பழுது நீக்கப்பட்ட உடன் விவசாயத் தேவைகளுக்காகவும் குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.