கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு..!

இராமநாதபுரம்‌ சிக்னல்‌ அருகில்‌ பாதாள சாக்கடை அமைக்கும்‌ பணிகள்‌, பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, வார்டு எண்‌.66க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ பகுதியில்‌ கழிவு தொட்டி அமைக்கும்‌ பணிகளை ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.65க்குட்பட்ட இராமநாதபுரம்‌ சிக்னல்‌ அருகில்‌ பாதாள சாக்கடை அமைக்கும்‌ பணிகள்‌, பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌,



வார்டு எண்‌.66க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ பகுதியில்‌ கழிவு தொட்டி அமைக்கும்‌ பணிகளையும்‌, வார்டு எண்‌.59க்குட்பட்ட பகுதியில்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ சோதனை ஓட்டத்தையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, கழிவு பண்ணையின்‌ மூலம்‌ சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, அதன்‌ செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில்‌ பாதாள சாக்கடை திட்டம்‌-3 கீழ் ரூ.143 கோடி மதிப்பீட்டில்‌ மணியகாரன்பாளையம்‌ முதல்‌ ஒண்டிப்புதூர்‌ வரை 221 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது திருச்சி சாலையில்‌ 5 கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு பணிகள்‌ மேற்கொள்ளப்படுகிறது.

இதில்‌ தற்போது 2 கிலோ மீட்டார்‌ தொலைவிற்கு பாதாள சாக்கடை பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ முடிக்கப்பட்டுள்ளது. மேலும்‌ 24X7 குழாய்‌ அமைக்கப்படவுள்ள இடத்தையும்‌, 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய்‌ அமைக்கப்படவுள்ள இடத்தையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டார்.

மேலும்‌, ஒண்டிப்புதூர், நெசவாளர்‌ காலனி பகுதியில்‌ தற்போது முடிக்கப்பட்ட பாதாள சாக்கடை பிரதான குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌ நிறைவுபெற்றுள்ளது. தற்போது சோதனை ஓட்டம்‌ செய்து 2300 குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்து, அதன்‌ பின்னர்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்‌ என மாநகராட்சி பொறியாளா்களுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.



அதேபோல, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59க்குட்பட்ட ஜெய்சாந்தி தியேட்டர்‌ அருகில்‌ பாதாள சாக்கடை சந்திப்பு கழிவு தொட்டியில்‌ சோதனை ஓட்டத்தை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.



பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.61க்குட்பட்ட பட்டணம்‌, இட்டேரி சாலை பிரதான குழாய்‌ அமைக்கப்பட்ட இடத்தை மேற்பார்வையிட்டு சாலைகளை உடனடியாக சீரமைக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட கல்லிமடை சந்திப்பு கோ - ஆப்பரேட்டிவ் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது மாநகரப்பொறியாளர்‌ (பொ) ராமசாமி, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, நிர்வாக பொறியாளர்‌ (பாதாள சாக்கடை திட்டம்‌) உமாதேவி, உதவி நிர்வாக பொறியாளர்‌ சசிப்பிரியா, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ முருகா, உதவி செயற்பொறியாளர்கள்‌ எழில்‌, ஃபெர்மன்‌ அலி, சத்யா, ரவி மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...