உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு..!

பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர் தான் தன்னை பற்றி பொய்யான வதந்திகளைச் சட்டத்திற்கு விரோதமாகப் போலியாகத் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் என்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பாக மனு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். தற்போது உடுமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் நேற்றைய தினம் அதிமுகவின் தலைமையிலிருந்து, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கையெழுத்து இட்டது போல், உடுமலை ராதாகிருஷ்ணனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாகப் போலி அதிமுக லெட்டர் பேட் ஒன்று பரவியது.



இது தொடர்பாக இன்று உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.



அதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி அருண்பிரசாத் என்பவர் தான் தன்னை பற்றி பொய்யான வதந்திகளைச் சட்டத்திற்கு விரோதமாகப் போலியாகத் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...