திருப்பூரில் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாற்றுத்திறனாளி தங்கை தர்ணா போராட்டம்.!!

பேச முடியாத காது கேட்காத தங்கையின் சொத்தை அபகரிக்க முயலும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை மற்றும் கணவருடன் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பேச முடியாத காது கேட்காத தங்கையின் சொத்தை அபகரிக்க முயலும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தந்தை மற்றும் கணவருடன் பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு செல்வராஜ் என்ற மகனும் ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இதில் ராஜேஸ்வரிக்கு வாய் பேச முடியாது, காதும் கேட்காது. நாச்சிமுத்து தனது மகன் மற்றும் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து தனது சொத்தை இருவருக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். மேலும் தான் சொந்த உழைப்பில் சம்பாதித்த, தாராபுரம் அடுத்த தளவாய் பட்டிணம் கிராமத்தில் உள்ள 11.44 ஏக்கர் நிலத்தை மகளின் பெயரில் கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக செல்வராஜ் மற்றும் அவரது மனைவி, தங்கைக்கு கொடுத்த நிலத்தில் பங்கு கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். மேலும் அங்கு அவர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரி சார்பில் தாராபுரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அடியாட்களை கொண்டு எங்களை மிரட்டி அதோடு மட்டுமல்லாமல் சாதிப் பெயரைச் சொல்லி அசிங்கமாகத் திட்டியுள்ளனர்.



இதனால் நாங்கள் உயிர் பயத்தோடு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் எங்களது சொத்தை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். எங்கள் குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது மகள் மற்றும் மருமகன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...