ரங்கே கவுடர் வீதியில் உள்ள குடோனில் சோதனை நடத்திய போது, 1 டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காட்டூர் போலீசார் பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரை கைது செய்தனர்.
கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, சந்தேகத்திற்குரிய நபரிடம் விசாரித்ததில் அவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் பெட்டிக்கடை வைத்திருப்பதாகவும், புகையிலை பொருட்களை ரங்கே கவுடர் வீதியில் உள்ள மொத்த விற்பனை குடோனில் இருந்து வாங்கி வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து , காட்டூர் போலீசார் விரைந்து சென்று அவர் சொன்ன குடோனில் சோதனை நடத்திய போது, மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, குடோன் உரிமையாளரான வடமாநிலத்தை சேர்ந்த பூமேஷ் யாதவ் என்பவரை கைது செய்தனர்.