ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கோவை: ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் தவிக்கும் தமிழர்களுக்காக கோவையிலிருந்து தினமும் பாகற்காய் மற்றும் கோவக்காய் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர்.
ஷார்ஜாவில் சர்க்கரை நோயால் அதிக தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் காரணமாக கோவையிலிருந்து தினமும் ஏற்றுமதி செய்யப்படும் கார்கோ பட்டியலில் பாகற்காய், கோவக்காய் அதிக பங்களிப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது,
'கோவை - ஷார்ஜா இடையே 'ஏர் அரேபியா' நிறுவனம் சார்பில் தற்போது தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இந்த விமானம் புறப்பட்டுச் செல்கிறது.
கார்கோ பொருத்தவரை 2 டன் முதல் மூன்று அல்லது மூன்றரை டன் வரை புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இன்ஜினியரிங் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பல்வேறு உணவு பொருட்கள் வழக்கமாக புக்கிங் செய்யப்படும்.
அதிலும் குறிப்பாக காய்கறியை பொருத்தவரை பாகற்காய், கோவக்காய் வாழைக்காய், சவுச்சவ், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் புக்கிங் செய்யப்படும்.
அதிலும் குறிப்பாக பாகற்காய்க்கு அதிக மவுசு தொடர்ந்து உள்ளது. ஷார்ஜாவில் உள்ள தமிழர்களில் பலர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதே இதற்கு காரணமாகும்.
உதாரணத்திற்கு ஒரு டன் காய்கறி புக்கிங் செய்யப்பட்டால் அதில் 500 கிலோ பாகற்காய் மட்டுமே புக்கிங் செய்யப்படும். அந்த அளவுக்கு ஷார்ஜாவில் பாகற்காய்க்கு அதிக தேவை உள்ளது. இந்த ஒரு காய்கறியை மட்டும் எவ்வளவு விலைக்கு விற்றாலும் அவற்றை வாங்க அங்குள்ள தமிழர்கள் தயாராக உள்ளனர்.'
இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.