தெரு விளக்கு எரிவது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின் பேரில்‌, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 பகுதியில்‌ உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உத்தரவின் பேரில்‌, மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.59 பகுதியில்‌ உள்ள தெரு விளக்கு எரிவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு செய்யப்பட்டதில்‌ வார்டு எண்‌.59-ல்‌ 5 தெருவிளக்குகள்‌ கணபதி நகர்‌ பகுதியில்‌ கடந்த 18 நாட்களாக எரியாமல்‌ உள்ளதினால்‌ பொதுமக்கள்‌ வீதிகளில்‌ சென்றுவர மிகவும்‌ இடையூறாக உள்ளது. இதனால்‌ சமூகவிரோத செயல்கள்‌ நிகழும்‌ சூழ்நிலையில்‌ உள்ளது.

எனவே, இப்பணியினை ஒப்பந்தம்‌ எடுத்துள்ள கே.சி.பி. இன்ஜினியாஸ்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தினருக்குப் பழுதை சரிசெய்து தெருவிளக்குகள்‌ எரியச்செய்திடக் கோரி கடிதம்‌ அனுப்பப்பட்டது.

மேலும்‌, ஒப்பந்தப்பத்திரத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து தெருவிளக்குகள்‌ எரியாத காரணத்தினால்‌ அபராத தொகை நாள்‌ ஒன்றுக்கு ரூ.25.00 வீதம்‌ 18 நாட்களுக்கு ரூ.2250/- அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...