கோவையில்‌ மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18-பேர் கோரிக்கை மனு அளித்தனர்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 18-பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமையில்‌ நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 18-பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா தலைமையில்‌ இன்று (01.12.2021) நடைபெற்ற சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ 18 பேர்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்களிடம்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ சொத்துவரி விதிப்பு, காலியிட வரிவிதிப்பு, சொத்துவரி பெயர்‌ மாற்றம்‌, தொழில்‌ வரி விதித்தல்‌, தொழில்‌ உரிமம்‌ வழங்குதல்‌, பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குதல்‌ மற்றும்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை அளித்தனர்‌.

இன்றைய குறைத்தீர்‌ கூட்டத்தில்‌ நகரமைப்பு பிரிவிற்கு 6-மனுக்களும்‌, வருவாய்‌ பிரிவிற்கு 4- மனுக்களும்‌, மாநகராட்சி பொறியியல்‌ பிரிவிற்கு 5-மனுக்களும்‌, கணக்கு பிரிவிற்கு 1-மனுவும்‌, பொதுச் சுகாதாரப்‌ பிரிவிற்கு 1-மனுவும்‌, பொதுப் பிரிவிற்கு 1-மனுவும்‌ என மொத்தம்‌ 18- மனுக்கள்‌ பெறப்பட்டது.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ இம்மனுக்களின்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும்‌, ஒவ்வொரு வாரமும்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டல அலுவலகங்களில்‌ புதன்கிழமையன்று‌, மத்திய மண்டலத்தில்‌ வெள்ளிக்கிழமையன்று‌ சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ கூட்டம்‌ நடைபெறும்‌ எனவும்‌, பொதுமக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள்‌ கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்‌ எனவும்‌ குடிநீர்‌ வசதி, சுகாதார வசதி, மின்விளக்கு வசதி மற்றும்‌ பொதுமக்களின்‌ கோரிக்கைகள்‌ மீது துறை ரீதியாகத் தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்படும்‌ எனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

இக்கூட்டத்தில்‌ கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ செந்தில்குமார் ரத்தினம்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...