கோவையில் துப்பாக்கியை காட்டி மிரட்டல்: தொழிலதிபர் கைது..!

கோவையில் சாலையில் செல்வோரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் கடந்த சில நாட்களாக ஏர் கன் என கூறப்படும் துப்பாக்கிகளுடன் சிலர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கேரள தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியுடன் பிடிபட்டார்.

அந்த துப்பாக்கியை தமது பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும் அதற்குரிய பில்களை அவர் கொடுத்ததால் போலீசார் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் தலைமையிலான போலீசார் ஆவாரம் பாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று வருவோரை ரகசியமாக போட்டோ எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் மேலும் சாலையில் செல்வோரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாகவும் ரோந்து சென்ற போலீசாருக்கு தகவல் கிடைத்தது

இதையடுத்து போலீசார் அவரம்பலயம் ரயில்வே கேட் அருகே சென்றனர். அந்த நபரை கண்காணித்தனர்.

சிறிது நேரத்தில் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி எடுத்து சாலையில் செல்வோரை மிரட்டினார். இதையடுத்து போலீசார் அந்த நபரை அழைத்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து போலீசார் துரத்திச் சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அந்த நபரை சோதனை நடத்தியபோது அவரிடம் இரண்டு கைத்துப்பாக்கிகள் இருந்தது. மேலும் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை பீளமேடு நவ இந்தியா பகுதியை சேர்ந்த அப்துல் அலி என்பவரின் மகன் சமீர் உல் ஹக் (37) என்பது தெரியவந்தது.

கோவையில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கும் பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் பென் ட்ரைவ் ஒன்று கைப்பற்றப்பட்டது. பென்டிரைவை ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பென்டிரைவில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் ஏராளமாக இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்தியபோது வீடியோக்களை வைத்து சமீர் உல் ஹக் மிரட்டி பணம் பறித்ததும் பணம் தராதவர்களை துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து சமீர் உல் ஹக் யார் யாரை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காட்டூர் போலீசார் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சமீர் உல் ஹக் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...