பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட சோமந்துரைசித்தூர் பஞ்சாயத்தில் உள்ள குடியிருப்புகளில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் பணம் கொடுத்து குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, குடிநீர் வசதி வழங்கவில்லை என்று கூறியும், குழாய் பதிப்பதற்காகச் சாலையில் தோண்டப்பட்ட குழிகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்படுவதாகக் கூறியும், பொதுமக்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில், புதிய குடிநீர் இணைப்புக்கு வைப்புத்தொகை மற்றும் குடிநீர் கட்டணம், மக்களின் பங்களிப்பு தொகை என மூன்று 3,680 ரூபாய் பெற்றுக்கொண்டு, தற்போது ஒரு சில நபர்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரோட்டில் குழிதோண்டி, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நின்று மேடு பள்ளமாக ரோடு இருப்பதால், பலரும் விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது. வைப்புத்தொகை கொடுத்த அனைத்து பயனாளிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்கி, குடிதண்ணீர் வழங்கி, சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் உடனடியாக சாலைகளைச் சீரமைக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.