கோவையில் ஏ.டி.எம் மையத்தில் திருட்டு முயற்சி: 15 நிமிடத்தில் கொள்ளையர்களை பிடித்த செட்டிபாளையம் போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு..!

கொள்ளைச் சம்பவத்தை தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர், செந்தில்குமார் மற்றும் காவலர்களை, உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம், செட்டிபாளையம் சந்திப்பின் அருகே உள்ள ஏ.டி.எம் மையத்தில் நேற்று, திங்கள் இரவு 9 மணியளவில் போலியான சாவியை பயன்படுத்தி கொள்ளையடிக்க நடைபெற்ற முயற்சியில், ஹரியானாவை சேர்ந்த இருவரை சம்பவம் நடந்த 15 நிமிடத்திற்குள் பிடித்த செட்டிபாளையம் போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டியுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்: வங்கியின் கட்டுப்பாட்டறை மூலம் பெறப்பட்ட எச்சரிக்கை தகவலின் பேரில் தாமதமின்றி 15 நிமிடத்திற்குள் விரைந்து சென்று கொள்ளைச் சம்பவத்தை தடுத்த செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர், செந்தில்குமார் மற்றும் காவலர்களை, உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

அதன்படி, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.எம்.எஸ்.முத்துசாமி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர், திறன்பட செயல்பட்ட செட்டிபாளையம் காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்கள்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...