இனி வரும் நாட்களில் 150 வீடுகளுக்கு ஒரு நபருக்கு சோதனை தீவிரப்படுத்தப்படும். அதே போல், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய கொரோனா வைரஸான "ஒமிக்ரான்" வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடு தோறும் சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வெளிநாடுகளில் ஒமிக்ரான் என்னும் வகை தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு தடை விதித்து வரும் நிலையில், ஒமிக்ரான் பரவல் மற்றும் அது உடலில் ஏற்படுத்தக்கூடிய பிரச்சனைகள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்றுவருகிறது.
கோவையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டகளிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன
இதனையடுத்து, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கையில், "மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 300 வீடுகளுக்கு ஒரு நபர் சளி, காய்ச்சல் கண்டறியும் பணியில் தற்போது நடைபெற்று வருகிறது. இனி வரும் நாட்களில் 150 வீடுகளுக்கு ஒரு நபர் என இப்பணி தீவிரப்படுத்தப்படும். அதே போல், கிராமப்புறங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்படும்,’’ என்றனர்.